இதையடுத்து, அவரது உறவினர்களின் சீர்வரிசையயை மிஞ்சும் வகையில், கார்த்திக், சேதுராமன், நாகராஜன், செல்வபாண்டி, மதன் மற்றும் திருமுருகன் உள்ளிட்டோர் தடபுடலாக சீர்வரிசைகளுடன் மேளதாளம், பொய்க்கால் குதிரை ஆகியவற்றுடன் வீட்டிற்கு சென்றனர். மேலும், 500கிலோ கொண்ட ராட்சத மாலையை கிரேன் மூலம் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அத்துடன் ஜல்லிக்கட்டு காளை மற்றும் கிடாய்களை சீர்வரிசையாக கொடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.