500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் சிலர் அதனை வங்கியில் டெபாசிட் முடியாததால், கோயில் உண்டியலில் போட்டு வருகின்றனர். எனவே இதை தடுக்க விரைவில் இ-உண்டியல் வைக்க திட்டமிட்டுள்ளனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய சில நடைமுறைகளை கொண்டுவந்துள்ளது. இதனால் கருப்பு பணத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய முடியாத காரணத்தினால் அவற்றை சிலர் கோயில் உண்டியலில் போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதற்கு வேட்டு வைக்கும் வகையில் இ-உண்டியலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் உண்டியல் திருட்டும் தடுக்கப்படும். டெபிட் கார்டு அல்லது கிரேடிட் கார்டு மூலம் ஸ்பை செய்து காணிக்கையை செலுத்திக் கொள்ளலாம்.
இத்திட்டத்தை முதன்முதலாக ஸ்ரீரங்கம் கோயில் மற்றும் பழனி கோயிலிலும் அறிமுகம்படுத்த திட்டமிட்டுள்ளனர்.