ஆண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் சிறப்பு தரிசனம்; முதல்வர் மனைவி வருகை தந்த கோவில்..!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (14:21 IST)
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்  சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் ஆதிபுரீஸ்வரர் கோயிலுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் வருகை தந்து தரிசனம் செய்தார்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தன்று மற்றும் சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் நாக கவசம் இன்றைய காட்சி அளிப்பது வழக்கம்.

அந்த வகையில் நேற்று  பௌர்ணமி தினம் என்பதால் நாக கவசம் இன்றி ஆதிபுரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். அவரது வருகையை அடுத்து கோவில் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்