தவெக மாநாடு நடைபெறும் இடத்தில் கனமழையால் சேறு, சகதி: ஒத்திவைக்கப்படுமா?

Siva
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (09:21 IST)
தளபதி விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது அங்கு கனமழை பெய்து வருவதாகவும் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் சேறும் சகதியுமாக இருப்பதால் மாநாட்டு பணிகள் தாமதம் ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக கன மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு மழை பெய்து வருவதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இன்னும் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மழை பெய்யும் என்பதால் குறிப்பிட்ட அந்த இடத்தில் மாநாடு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது மாநாடு நடைபெறும் இடம் சேறும் சகதியுமாக இருப்பதால் மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணி உட்பட எந்த பணியும் செய்ய முடியாமல் தாமதம் ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஒரு முறை மாநாடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கனமழை காரணமாக மீண்டும் ஒத்திவைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்