சென்னையில் “வேண்டாம் போதை” விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (21:14 IST)
சென்னை கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல் ஆணையாளர் தலைமையில் “வேண்டாம் போதை” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
சென்னையில் கடந்த 7 நாட்களில் 44 கிலோ 735 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.  நடப்பாண்டில் 1072.111 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
 
 சென்னையில் கடந்த 7 நாட்களில் போதை பொருள் சம்பந்தப்பட்ட 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 54 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் 
 
மேலும் அவர்களிடமிருந்து மூன்று செல்போன்கள் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது
 
சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்