சென்னையில் இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (16:10 IST)
சென்னையில் வரும் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பதாக சென்னை காவல் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
 
சென்னையில் வரும் 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வர உள்ளார் என்பதும் இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் ஜூலை 29ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்
 
இந்த நிலையில் பிரதமர் வருகை காரணமாக பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜூலை 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்