பார்வையற்ற தம்பதிகள் பேருந்தில் இருந்து கீழே இறங்குவதற்குள் பேருந்தை டிரைவர் இயக்கியதால் அந்த தம்பதிகள் கீழே விழுந்துவிட்டதை அடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் திப்பு சமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகிய இருவருமே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். இருவரும் போக்குவரத்து துறை சார்பாக இலவச பயண அட்டை பெற்று இருந்த நிலையில் அடிக்கடி அரசு பேருந்துகளில் ஏறி வேலூருக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று அரசு பேருந்தில் வேலூரில் ஏறிய இருவரும் பயணம் செய்த நிலையில், அவர்களுடைய ஸ்டாப் வந்த போது பார்வையற்ற தம்பதிகள் தட்டு தடுமாறி இறங்க முயன்றனர்.
அப்போது திடீரென ஓட்டுநர் பேருந்தை இயக்க முயன்றதால் இருவரும் கீழே விழுந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் பதறியடித்து இருவரையும் தூக்கி விட்டனர். இருவருக்குமே சிறிய காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறை விசாரணை செய்து டிரைவர், கண்டக்டர் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது,