இரட்டை இலை சின்னம்: கைவிரித்த உச்சநீதிமன்றம்; தினகரனின் அடுத்த மூவ் என்ன?

Webdunia
வெள்ளி, 15 மார்ச் 2019 (11:23 IST)
இரட்டை இலை சின்னத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம்.

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு வழங்கியதை எதிர்த்து டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அளித்த டெல்லி ஐகோர்ட், தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கியது சரியான நடவடிக்கையே என தீர்ப்பு அளித்து தினகரனின் மனுவை தள்ளுபடி செய்தது.
 
இதனை எதிர்த்து தினகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
 
இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பிற்க்கு தான் இரட்டை இலை சின்னம் எனவும் அதற்கு தடை விதிக்க முடியாது எனவும் உத்தரவிட்டார். மேலும் தினகரன் குக்கர் சின்னம் ஒதுக்கோரி அளித்துள்ள மனு குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இதுகுறித்து தினகரன் ஏற்கனவே பேசுகையில் ஒருவேளை குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்றால் அனைத்து தொகுதிகளிலும் சுயேட்சையாக நின்று, ஒவ்வொரு தொகுதியிலும் வெவ்வேறு சின்னங்களில் நின்றாலும், வெற்றிபெறுவோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்