தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய நடிகர் விஜய், தற்போது திமுகவை மட்டுமே எதிர்த்து செயல்படுவதாக கருதப்படுகிறது. இதற்குப் பதிலளிக்கும் வகையில், திமுக தலைவர்களும் விஜய்யை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தின்போது உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் அரசியல் நிலவரங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அப்போது, விஜய்யை யாரும் விமர்சிக்க வேண்டாம் என திமுக தலைமை உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் கட்சியினருக்கு ஏதாவது பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், தலைமை மட்டுமே கருத்து தெரிவிக்கும் என்றும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்கள் விஜய்யை விமர்சிக்க வேண்டாம் என அமைச்சர்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அண்ணாமலையின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் கூறியதால் தான் அவர் அரசியலில் முக்கியத்துவம் பெற்றார். அதுபோல, விஜய்யை மறைமுகமாக பிரபலப்படுத்த கூடாது என்பதற்காகவே, திமுக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.