தி.மு.க.வினர் திருந்தவே மாட்டார்கள்...தினகரன் டுவீட்... மு.க ஸ்டாலின் அதிரடி .....

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (15:59 IST)
சென்னை ஜே ஜே நகரில் உள்ள அம்மா உணவகத்தில் இன்று காலை மூவர் அங்கிருந்த பேனர்களை கிழித்ததுடன், அம்மா உணவகத்தில் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என தகராறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில்,  ஏழை எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் இன்று சில சமூக விரோதிகளால் சேதப் படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது..மழை வெள்ள காலம்,கொரோனா கால ஊரடங்கின் போதும் அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூரையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்..எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ரகளை செய்தவர்களை கட்சியிலிருந்து நீக்கவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் அம்மா உணவகத்தில் சேதப்படுத்தப்பட்ட பேனர் மீண்டும் வைக்கப்பட்டதுடன், ரகளை செய்த மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்