அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கிய திமுகவினர் - ஆட்சியில் அமர்வதற்குள் அராஜகம்!

செவ்வாய், 4 மே 2021 (12:38 IST)
ஏழை மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் சூறையாடப்பட்டது - திமுகவை சேர்ந்த சிலர் அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கினர்:
 
 சென்னை முகப்பேர் மேற்கில் உள்ள அம்மா உணவகத்தின் வாயிலில் இருந்த பெயர் பதாகை, உள்ளே இருந்த ஜெயலலிதா புகைப்படத்தை திமுகவை சேர்ந்த சிலர் அடித்து நொறுக்கும் காட்சி வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
 
ஆயிரம் அரசியல் வேறுபாடு இருந்தாலும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஒரு பெண் என்கிற முறையில் மரியாதை கொடுத்திருக்கலாம் என்று பொது மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இன்று மதிய உணவை தயார் செய்து கொண்டிருக்கையில் உள்ளே புகுந்து திமுகவினர் அம்மா உணவக ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமல்லாமல் அங்கிருந்த காய்கறிகளை வீசி எறிந்தனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்