சிறுவாணி ஆற்றில் அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து திமுக சார்பில் கோவை கொடிசியா மைதானத்தில் இன்று ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் திமுக பொருளாளரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
சென்னையிலிருந்து கோவை செல்ல விமான நிலையத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், எதிர்கட்சியினரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் திராணி இல்லாத அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.
மேலும், தூங்கி கொண்டிருக்கும் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசை தட்டி எழுப்பவே இன்று கோவையில் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாகவும், இந்த போராட்டம் கேரளா அரசையும் செவி சாய்க்க வைக்கும் என்றும் ஸ்டாலின் கூறினார்.