முதல்வர் ஜெயலலிதா குறித்து திமுக தலைவர் கருணாநிதி ட்வீட்

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (01:08 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விரைவில் பூரண நலம் பெற விழைகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


 

கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரண்டு மாத காலங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 19ஆம் தேதி அன்று சிறப்பு பொதுப்பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டார் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று மாலை திடீரென அவசர சிகிச்சை பிரவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.கருணாநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விரைவில் பூரண நலம் பெற விழைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், திமுக பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் ‘‘முதல்வருக்கு அளிக்கப்படும் தீவிர சிகிச்சைகள் பலனளித்து விரைவில் நலம் பெற விரும்புகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்