திருப்பரங்குன்றத்தில் அசைவம் சாப்பிட்டதை நிரூபித்தால் பதவி விலக தயார்: நவாஸ் கனி எம்பி

Siva
வெள்ளி, 24 ஜனவரி 2025 (14:30 IST)
திமுக எம்பி நவாஸ்கனி திருப்பரங்குன்றம் மலைக்கு தன்னுடைய ஆதரவாளருடன் சென்று பிரியாணி சாப்பிட்டார் என்று புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இதுகுறித்து அண்ணாமலையும்  விமர்சனம் செய்திருந்தார். இதனை அடுத்து நான் எனது ஆதரவாளருடன் திருப்பரங்குன்றம்  சென்று அசைவம் சாப்பிட்டதை அண்ணாமலை நிரூபித்தால் நான் பதவி விலக தயார் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறிய போது, "திருப்பரங்குன்றத்தில் நான் அசைவம் சாப்பிட்டதாக அண்ணாமலை சொல்லி இருந்தார். அவ்வாறு  மேலே சென்று அசைவம் சாப்பிட்டதை நிரூபித்தால் நான் என்னுடைய எம்பி பதவியில் இருந்து விலக தயார். ஆனால் அதே நேரத்தில் நிரூபிக்கவில்லை என்றால், அண்ணாமலை தனது தமிழக பாஜக தலைவர் பதவியை விட்டு விலகுவாரா?

அண்ணாமலை  பொய்களை தொடர்ந்து தமிழகத்தில் சொல்லிக் கொண்டிருப்பவர். அண்ணாமலை ஐபிஎஸ் படித்து விட்டு பொய் தான் பேசிக் கொண்டிருக்கிறார். லண்டனில் போய் படித்துவிட்டு இன்னும் கூடுதலாக எல்லோரும் நம்பற மாதிரி பொய்களை சொல்லி வருகிறார்.

நான் திருப்பரங்குன்றம் மலைக்கு மேலே செல்லவில்லை, கீழே மட்டும் தான் இருந்தேன். இது காவல்துறையினருக்கும் பாஜக கட்சியில் இருப்பவர்களுக்கும் கூட தெரியும். கீழே இருந்து மேலே செல்வதற்கு என்னென்ன பிரச்சனை இருக்கிறது என்பதை மட்டுமே நான் விசாரணை செய்து கொண்டிருந்தேன்," என்று கூறினார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்