சிபிஐ என்ன கூண்டுக்கிளியா? நள்ளிரவு மாற்றத்தால் ஸ்டாலின் ஆங்கிரி!

புதன், 24 அக்டோபர் 2018 (18:30 IST)
பிரதமர் நரேந்திர மோடி சிபிஐ இயக்குனரை நள்ளிரவில் மாற்றி ஜூனியர் அதிகாரியை இயக்குனராக நியமித்திருப்பதை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது பின்வருமாறு, நேர்மையாகவும், சுதந்திரமாகவும், சட்ட நெறிமுறைகளின் படியும் செயல்பட வேண்டிய நாட்டின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவை, மோடி நள்ளிரவில் மாற்றியிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறேன்.
 
பிரதமரின் ரஃபேல் ஊழல், எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு, குட்கா புகழ் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு என விசாரணை நடத்த வேண்டிய நிலையில், சிபிஐ இயக்குநரை மாற்றி ஜூனியர் அதிகாரியை பிரதமர் நியமித்திருப்பது உள்நோக்கம் கொண்டது. 
 
நாட்டில் உள்ள மூத்த டிஜிபி-க்களில் ஒருவர்தான் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட வேண்டும் என்ற மரபு இருக்கிறது. சிபிஐ அமைப்பில் தற்போது வேறு கூடுதல் இயக்குநர்களும் இருக்கிறார்கள்.
 
ஆனால், அவர்களை எல்லாம் விட்டு இணை இயக்குநர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவரை இயக்குநராக நியமித்து இருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வர் ராவ் சர்ச்சைக்குள்ளானவர். 
 
ஜூனியர் அதிகாரியை நியமித்து, சிபிஐ அமைப்பை தங்களின் கூண்டுக்கிளி ஆக்கியுள்ளது பாஜக அரசு. எனவே, இந்த உத்தரவை உடனடியாக பிரதமர் மோடி ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்