சிபிஐக்கு புதிய இயக்குனர்: பணியில் இருந்த 2 இயக்குனர்கள் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு

புதன், 24 அக்டோபர் 2018 (08:14 IST)
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக சிபிஐ அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகளே ரெய்டு செய்தனர். சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே இந்த ரெய்டுக்கு காரணமாக கூறப்படுகிறது.

குஜராத்தை சேர்ந்த மருந்து நிறுவனம் ஒன்றிடம் இருந்து சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரை அடுத்து சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிபிஐ அலுவலகத்தில் ரெய்டு நடத்த உத்தரவிட்டார். இந்த ரெய்டின் முடிவில் ராகேஷ்குமார் மற்றும் சிபிஐ டிஎஸ்பி தேவேந்திர குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேவேந்திரகுமார் கைது செய்யப்பட்டார். ராகேஷ்குமார் கைதுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால் அவர் கைது செய்யப்படவில்லை

இந்த நிலையில் சிபிஐ இயக்குனர், சிறப்பு இயக்குனர் இருவரையும் பிரதமர் மோடி அழைத்து சமாதானம் பேசினார். இருப்பினும் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடி அதிகரித்ததால் இருவரையும் விடுப்பில் செல்ல உத்தரவிட்ட மத்திய அரசு, புதிய சிபிஐ இயக்குனராக நாகேஸ்வர்ராவை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்