சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தி.மு.க தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் இன்று ஆஜரானார். அவர் முதல்முறையாக இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். எனவே நீதிமன்றத்தில் தி.மு.க தொண்டர்கள் கூடியிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.