பாஜகவுக்கு மோடி எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?

புதன், 24 அக்டோபர் 2018 (17:53 IST)
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்கு நன்கொடை அளிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுப்பட்டுள்ளது. மொபைல் ஆப் மூலம் நன்கொடை வழங்கலாம் என கூறப்பட்டிருந்தது. 
 
மொபைல் ஆப் மூலம் ரூ.5 முதல் ரூ.1000 வரை தங்களால் முடிந்த அளவு கட்சிக்கு நன்கொடை வழங்கலாம் என கூறப்பட்டிருந்தது. அதன்படி மோடி மொபைல் ஆப் மூலம் ரூ.1000 நன்கொடையாக வழங்கியுள்ளார். 
 
மோடியின் இந்த நடவடிக்கை பாஜகவுக்கு நிதி திரட்டும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும் அவர் அளித்த நன்கொடை ரசீதயும் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்