எடப்பாடியார் ஏரியாவையும் சேர்த்து வளைத்த திமுக..! – முன்னணி நிலவரம்!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (12:34 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் திமுக வெற்றி பெற்று வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொகுதியிலும் பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாதக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. தற்போது உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் திமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிமுக 10 தொகுதிகளில் வென்றது. இந்நிலையில் தற்போதைய உள்ளாட்சி தேர்தலில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஊரான எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. சேலம் மாநராட்சியிலும் அதிக இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்