தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்ட ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மதிவேந்தனை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலார் உதயநிதி ராசிபுரம் புதிய பேருந்துநிலையத்தில் இன்று பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மோடி தலைமையிலான பாஜக அரசு ரூ.15 லட்சம் கொடுப்பதாக கூறியது. அதைச் செய்யவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டியது ஒரே செங்கல் தான். அதையும் நான் எடுத்துவந்துவிட்டேன். மோடியிடம் தமிழகத்தில் உரிமைகளை அடமானம் வைத்துவிட்டார் முதல்வர் எடபபடி….வரும் தேர்தலில் திமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெரும் எனத் தெரிவித்தார்.