மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 அல்ல, ரூ.1900: உதயநிதி ஸ்டாலின்..!

Siva
ஞாயிறு, 7 ஏப்ரல் 2024 (07:32 IST)
கடந்த சில மாதங்களாக தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 900 ரூபாய் சேர்த்து 1900 வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிர்களுக்கும் மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் தகுதி வாய்ந்த மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது

இந்த நிலையில் இந்த ஆயிரம் ரூபாய் மட்டும் இன்றி இலவச பேருந்து மகளிர்க்கு அளிக்கப்படுவதால் அதில் 900 ரூபாய் ஒவ்வொரு பெண்ணுக்கும் சேமிப்பு கிடைப்பதாகவும் அதனால் திமுக அரசு ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு 1900 ரூபாய் வழங்கி வருகிறது என்றும் நேற்றைய தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

மேலும் தேர்தலுக்காக தமிழ்நாட்டிற்கு அடிக்கடி பிரதமர் வந்து செல்கிறார் என்றும் சென்னை வெள்ளம் ஏற்பட்டபோது அவர் தமிழகம் அந்தாரா என்றும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்

இந்தியாவிலேயே கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளுக்கு ஆறுதல் கூறியவர் நமது முதலமைச்சர் மட்டும்தான் என்றும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கும்போது தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு துரோகம் செய்தார் என்றும் உதயநிதி ஸ்டாலின் பேசினார்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்