திமுக முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம் திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
கடந்த 1996-2001-ம் ஆண்டு பெரம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும், வீட்டு வசதி மற்றும் கூட்டுறவு சங்க தலைவராகவும் பதவி வகித்தவர் செங்கை சிவம்.
திமுக செயற்குழு உறுப்பினர் மற்றும் கலை இலக்கிய பேரவை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். தற்போது அவருருக்குவயது 68.
கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு பெரம்பூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். பின்பு, ஒரு தனியார் ஸ்கேன் மையத்திற்கு சென்றார். அங்கு, அவருக்கு முதலில் ஸ்கேன் எடுக்கப்பட்டது.
அப்போது, அவர் பாத்ரூமுக்கு சென்ற போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அங்கேயே மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இதனையடுத்து, அவரது உடல் பெரம்பூரில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்த தகவல் அறிந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செங்கை சிவம் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதே போல, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.