மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
ராஜ்யசபா எம்பிக்களின் தேர்தல்:
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவி காலியாக இருக்கும் நிலையில் இந்த பதவிகளுக்கு ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணிக்கு 4 எம்பிக்களும், அதிமுக கூட்டணி 2 எம்பிக்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் கிடைக்கும் 4 எம்பிக்களில் 3 எம்பிக்கள் திமுகவும், ஒரு எம்பி காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்து கொள்கின்றன. அதிமுகவுக்கு கிடைக்கும் 2 எம்பிக்களில் கூட்டணி கட்சிகளுக்கு எதுவும் இல்லை. இருப்பினும் பாமக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.
வேட்புமனு தாக்கல் துவக்கம்:
இந்நிலையில் தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட மே 31 ஆம் தேதி வரை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி இடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். மாநிலங்களவை தேர்தல் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் நடைபெறும். ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் 34 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக வேட்பாளர்கள்:
மூன்று இடங்களில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக தஞ்சை கல்யாணசுந்தரம், ராஜேஷ் குமார் மற்றும் கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.