மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! – போட்டியின்றி தேர்வா?

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (13:18 IST)
மாநிலங்களவையில் காலியாக உள்ள மீதம் இரண்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக உள்ள நிலையில் செப்டம்பர் 13-ஆம் தேதி ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி இந்த தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளராக எம்எம் அப்துல்லா என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து தற்போது மீதமுள்ள இரண்டு பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக சார்பில் மறைந்த மூத்த தலைவர் என்.வி.என் சோமுவின் மகள் டாக்டர். கனிமொழி மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என் ராஜேஷ் குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்