பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாய உத்தரவு! – மொத்தமாக வாபஸ் வாங்கிய நீதிமன்றம்!

செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (12:52 IST)
புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை உயர்நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் அடிப்படையில் 5 ஆண்டுக்கான காப்பீடு செய்வது கட்டாயம் என்று சமீபத்தில் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதை தொடர்ந்து இதுகுறித்து போக்குவரத்துத்துறை சுற்றறிக்கையும் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் தற்போது அனைத்து வாகனங்களுக்கும்  ’பம்பர் டூ பம்பர்’ என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கான சூழல் இல்லை. அதே சமயம் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய திருத்தங்களை அரசு கொண்டு வரும் என்று நம்பிக்கை உள்ளது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து போக்குவரத்து துறையின் சுற்றறிக்கையும் திரும்ப பெறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்