கமல், ரஜினியை காப்பியடிக்கின்றதா திமுக?

Webdunia
ஞாயிறு, 2 ஜூன் 2019 (08:35 IST)
தமிழக அரசியலில் புதியதாக களம் காணும் கமல், ரஜினி நிச்சயம் தமிழகத்தில் திராவிட அரசியலுக்கான ஒரு மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல் ஏற்கனவே களத்தில் இறங்கி வேலை செய்து வரும் நிலையில் ரஜினி எப்போது வேண்டுமானாலும் களத்தில் இறங்க வாய்ப்பு உள்ளது.
 
இந்த நிலையில் மக்களுக்கு சேவை செய்ய கமல், ரஜினி எடுத்த முயற்சிகளை திமுக காப்பியடித்து வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். முதலாவதாக கிராம சபை கூட்டத்தை கமல்ஹாசன் தான் முதலில் தமிழகத்தில் பிரபலப்படுத்தி அதுகுறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். அதன்பின்னர் தான் திமுக தலைவர் முக ஸ்டாலின் கிராம சபையை கூட்டி அதில் தேர்தல் பிரச்சாரமும் செய்தார்.
 
அதேபோல் சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடி வரும் நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்கள் சொந்த காசில் லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக அளித்தனர். இந்த நடவடிக்கையால் ரஜினியின் புகழ் அதிகரித்தது. அனைத்து ஊடகங்களும் இதனை பாராட்டின.

இதனை பொறுக்க முடியாத திமுக, தற்போது இதையும் காப்பியடித்துள்ளது. நேற்று ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் பகுதி மண்ணடி அம்மன் கோயில் தெருவில் திமுக சார்பில்  லாரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
 
50 ஆண்டுகளுக்கும் மேல் கட்சி நடத்தி வரும் திமுக, நேற்று வந்த கமல், ரஜினியை காப்பியடிப்பதை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்