அரவக்குறிச்சி பிரச்சாரத்தில் ‘இந்து தீவிரவாதம்’ குறித்துப் பேசியது தொடர்பான வழக்கில் இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். இதற்கான திருச்சி வந்த அவரிடம் பத்திரிக்கையாளர் வாக்கு இயந்திரத்தில் ஓட்டுக்கள் காணாமல் போய்விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த கமல் ‘ ஒட்டுமொத்தமாக நாம் அவ்வாறு சொல்ல முடியாது. பிழைகள் நடந்திருக்கலாம். அதைக் கண்டறிவது நம் ஜனநாயகக் கடமை’ எனக் கூறியுள்ளார். மேலும் பலக் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் ‘ தேர்தலுக்குப் பின் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் அனைவரிடமும் உள்ளது. அது இல்லாதவாறு மோடியின் அடுத்த 5 ஆண்டுகாலம் இருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.