20 நிமிடமே நீடித்த மீட்டிங்... திமுக - காங். டீல் ஓகேவா?

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (10:29 IST)
திமுக தலைவர் ஸ்டாலினை நேற்று தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்தித்தனர். 
 
கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்து இந்த சந்திப்பு இருக்க கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், சுமார் 20 நிமிடங்களே நீடித்த இந்த சந்திப்புக்கு பின்னர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களுக்கு பின்வருமாறு பேட்டியளித்தார்... 
 
தமிழக காங்., மூத்த தலைவர்களுடன், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, நவ.30 ராகுல் ஆலோசனை நடத்தினார். அதில், தமிழகத்திற்கு ராகுல் பிரசாரம் செய்ய வருவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. ராகுல் பயணம் குறித்து, ஸ்டாலினிடம் தெரிவித்தோம். 
 
ராகுலுடன் ஸ்டாலினும் பிரசாரம் செய்ய அழைப்பு விடுத்தோம். இந்த முயற்சிக்கு, தி.மு.க., பாராட்டு தெரிவித்தது. தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை. தமிழக தேர்தல் களம் குறித்த நிலவரத்தை அறிய, சோனியா, ராகுல் விரும்பினர். அந்த அடிப்படையில், ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளோம். மற்ற விவகாரங்கள் குறித்து, பின்னர் தெரிவிப்போம் என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்