தினகரன் ஒரு சுயேட்சை வேட்பாளர் - முன்னாள் அமைச்சர் விளாசல்

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (14:02 IST)
தினகரன் ஒரு சுயேட்சை வேட்பாளர்தான். அவர் எங்களுக்கு போட்டியே அல்ல என ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சசிகலாவிற்கு எதிராக களம் இறங்கிய ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவாக 11 எம்.எல்.ஏக்கள், 11 எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் உள்ளனர். மேலும், பல முன்னாள் அமைச்சர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
1991-96ம் ஆண்டு கால கட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ராஜ கண்னப்பன். அதன் பின் சில வருடங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் தற்போது ஓ.பி.எஸ் அணியில் இணைந்துள்ளார்.
 
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர்  “ஓ.பி.எஸ் அணியில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான். தினகரனை ஒரு வேட்பாளராகவே நாங்கள் கருதவில்லை. அவர் ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டுமே. எங்கள் அணி வேட்பாளர் மதுசூதனனே வெற்றி பெறுவார்” என அவர் கூறினார்.
அடுத்த கட்டுரையில்