சசிகலாவை சந்திக்க விரும்பாத திவாகரன் - பின்னணி என்ன?

Webdunia
புதன், 1 மார்ச் 2017 (14:13 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவை அவரது சகோதரர் திவாகரன் சந்திக்க விரும்பாததன் பின்னணி வெளியே கசிந்துள்ளது.


 

 
சசிகாலா தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹார பகுதியில் உள்ள மத்திய சிறை சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அவ்வப்போது, சசிகலாவின் உறவினரும், அதிமுக துணை பொதுச்செயலாளருமான தினகரன், கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சென்னையிலிருந்து பெங்களூர் சென்று சந்தித்து பேசி விட்டு வருகிறார்கள். 
 
ஆனால், சசிகலாவின் சகோதரரான திவாகரன் சிறைக்கு சென்று அவரை சந்திக்க செல்வதில்லை. சமீபத்தில் கூட திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் மட்டுமே, சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து விட்டு வந்தார். அப்போது டி.டி.வி. தினகரன் பற்றிய பெரிய புகார் பட்டியலை சசிகலாவிடம் வாசித்து விட்டு வந்ததாக செய்திகள் உலா வருகிறது.


 

 
காரணம் இதுதான். அதிமுக சசிகலாவின் கைகளுக்கு வந்த பின், தனக்கு கட்சியில் பெரிய பதவி தரப்படும் என திவாகரன் எதிர்பார்த்தார். ஆனால், அது நடக்கவில்லை. மேலும், சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையிலும், தினகரனையே துணைப் பொதுச்செயலாளராக நியமித்து விட்டு சென்றார் சசிகலா. இது திவாகரனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். மேலும், கட்சி தனது கட்டுப்பாட்டிற்கு வந்த காரணத்தினால், திவாகரன், நடராஜன் உட்பட குடும்ப உறவுகள் அனைவரையும் தினகரன் ஓரம் கட்டி வருவதாக தெரிகிறது.
 
இது குறித்துதான் திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் சசிகலாவிடம் புகார் கூறியுள்ளார். இதுபற்றியும், திவாகரன் தன்னை சந்திக்காததில் சசிகலா வருத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
அடுத்த கட்டுரையில்