ஐப்பசி முதல் நாள் காவிரி தீர்த்தவாரி, மயூரநாதர் ஆலயம் வதானீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் இருந்து சுவாமிகள் தீர்த்த வாரி அளித்தனர்.
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் கங்கை முதலான புண்ணியநதிகள் ஐப்பசிமாதத்தில் வந்து நீராடி தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக ஐதீகம்.
இதனை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நகிழ்ச்சி நடைபெறும்.
அதேபோல் இவ்வாண்டு ஐப்பசி மாத முதல்நாள் தீர்த்தவாரியுடன் துலா உற்சவம் தொடங்கியது.
திருவாவடுதுறை ஆதீனத்திற்குசொந்தமான பெரிய கோயில் எனப்படும் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயம் அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், தெப்பக்குள காசிவிஸ்வநாதர் சுவாமி, ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் சுவாமி ஆகியவை பஞ்சமூர்த்திகளுடன் காவிரியின் இருக்கரைகளிலும் எழுந்தருள அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து சுவாமி தீர்த்தம் கொடுக்க, தருமபுரம் ஆதீன 27ஆவது மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.
தொடர்ந்து இருகரைகளிலும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.