பரவும் டெங்கு... பீதியில் மக்கள்!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (10:57 IST)
கூடலூர் அருகே காசிம்வயல் பகுதியில் நான்கு பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

 
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தை கடந்த சில மாதங்களாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் சற்று குறைந்துள்ள சூழலில் டெங்கு காய்ச்சல் வடிவில் அடுத்த ஆபத்து தமிழகத்திற்கு வந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 
 
ஆம், கூடலூர் அருகே காசிம்வயல் பகுதியில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. காசிம்வயல் பகுதியில் மேலும் பலருக்கு காய்ச்சல் இருப்பதால் டெங்கு பரவும் அபாயம் இருப்பதால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்