சென்னைக்கு அருகில் 80 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (15:37 IST)
வங்க கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்கி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது இன்று சென்னையில் கரையை கடக்க உள்ளது.
 
இந்நிலையில் தற்போது சென்னயிலிருந்து தென்கிழக்கே 80 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. ஆம், சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 80 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து வடகிழக்கு திசையில் 140 கி.மீ தொலைவிலும் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
 
இன்று மாலை சென்னை அருகே இது கரையை கடக்கும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடக்கும் போது மணிக்கு 40-45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்