புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நிறுத்திய தடை நீட்டிப்பு!

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (15:23 IST)
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது பல கட்டமாக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற தொடங்கி உள்ளன.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தால் தடை பிறப்பிக்கப்பட்டிருந்தது. சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீடு வழங்க முடியாது என புதுச்சேரி தேர்தல் ஆணையம் அளித்திருந்த விளக்கத்தை ஏற்று இந்த தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட காலம் தேர்தல் தள்ளிப்போட முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்