இரண்டு நாட்களுக்கு பாஜக கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து -அண்ணாமலை

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (20:42 IST)
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் திரு.பங்காரு அடிகளார் இன்று  காலமானார் . இந்த நிலையில், ‘ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிறுவனர் தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் முக்தி அடைந்தார் என்ற செய்தியை தொடர்ந்து அம்மாவின் பிரிவு துயராற்ற, அடுத்து இரண்டு நாட்களுக்கு நமது கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.’’என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில்,

''மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிறுவனர் தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் முக்தி அடைந்தார் என்ற செய்தியை தொடர்ந்து அம்மாவின் பிரிவு துயராற்ற, அடுத்து இரண்டு நாட்களுக்கு நமது கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

நாளைய நடைபயணத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துவிட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் காத்திருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், பாஜக சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், தவிர்க்கவியலாத காரணத்தினால், நடைபயணத்தில் ஏற்பட்டுள்ள இந்த தேதி மாற்றத்தைப் பொறுத்தருள வேண்டிக் கொள்கிறேன். திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான நடைபயண தேதி விரைவில் அறிவிக்கப்படும். ஓம் சாந்தி.''என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்