யெஸ் பேங்க் நிர்வாகம் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் அதன் வாடிக்கையாளர்களுக்கு பண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வரும் நிலையில் அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் தற்போது கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 3 ஆம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மாத காலத்திற்கு யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
1. வாடிக்கையாளர் தங்கள் கணக்கில் இருந்து ரு.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும்.
2. மருத்துவம், கல்வி, திருமணம், தவிர்க்க முடியாத அவசர தேவைகளுக்கு மட்டும் வங்கி மேலாளரின் அனுமதியுடன் ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்கலாம்.
3. ரூ.50,000-த்துக்கு மேல் EMI கட்டுபவர்கள் பணம் செலுத்தும் நிறுவனத்திடம் ஒரு மாத கால அவகாசம் கோரலாம்.
4. வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது.