தமிழ்நாடு அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள அரசாணையில் 8 தாசில்தார் மற்றும் 11 துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த 8 தாசில்தார் மற்றும் 11 துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 1.06 கோடி பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தை உள்ள குறைகளை நீக்குவதற்காகவும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும் தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நியமனம் செய்யப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு அரசாணை மூலம் தகவல் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு மகளிர் உரிமை திட்ட பயனாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்