கையெழுத்து போட வரவேண்டாம் –கருணாஸுக்கு விலக்கு

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (17:39 IST)
காவல்நிலையத்திற்கு சென்று கையெழுத்து இடுவதற்கு விலக்கு கேட்டிருந்த கருணாஸுக்கு நான்கு நாட்கள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சென்ற மாதம் 16ஆம் தேதி நகைச்சுவை நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழக முதல்வரையும் காவல்துறை அதிகாரி ஒருவரையும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார், இந்த பேச்சு ஜாதி மோதல்களை தூண்டும் வகையில் பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது 'ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாகவும் இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்படட்டுள்ளது.

இதனையடுத்து இரண்டு வழக்குகளில் இருந்தும் தனக்கு ஜாமீன் வேண்டும் என கருணாஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. செப்டம்பர் 28-ந்தேதி அவருக்கு  இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் தினமும் திருவல்லிக்கேணி மற்றும் நுங்கம்பாக்கம் காவல்நிலையங்களில் 30 நாட்களுக்கு ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தமாதம் 30-ந்தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 110வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கொண்டாடப்படும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள ராமநாதபுரம் செல்ல இருப்பதால் தனக்கு 4 நாட்களுக்கு காவல்நிலையத்திற்கு வந்து கையெழுத்து இடுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அதை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு அக்டோபர் 27 முதல் 30-ந்தேதி வரை விலக்கு அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்