குளிர்காலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும்... எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (11:03 IST)
குளிர்காலத்தில் கொரோனா பரவலும் அதிகரிக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளதாக எச்சரிக்கை. 
 
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளும் மெல்ல குறைந்துள்ள நிலையில் குளிர்காலத்தில் கொரோனா பரவலும் அதிகரிக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
இருமல், தும்மல் போன்றவை இருந்தால் காலமாற்றத்தால் வந்தது என அலட்சியமாக இருக்க வேண்டாம் எனவும், மழையில் நனைந்து விட்டால் முகக்கவசத்தை உடனே மாற்ற வேண்டும் எனவும் ஈர கைகளில் சானிடைசர் பயன்படுத்தினால் அது பலன் தராது அதற்கு பதில் சோப்பை பயன்படுத்துங்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்