மாநாடு படத்தில் எஸ் ஏ சந்திரசேகரின் கதாபாத்திரம் இதுதான் – வெளியான ரகசியம்!

புதன், 18 நவம்பர் 2020 (10:48 IST)
மாநாடு படத்தில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் முதல்வர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிம்பு கொரோனா லாக்டவுனுக்கு முன்னர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் கொரோனா பாதிப்புக்குப் பின் அவர சுசீந்தரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். தற்போது பாண்டிச்சேரியில் அதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பது நாம் அறிந்ததே. முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் எஸ் ஏ சந்திரசேகரனின் கதாபாத்திரம் என்ன என்பது இப்போது வெளியாகியுள்ளது. படத்தில் அவர் முதல்வர் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ஏற்கனவே அவர் தனுஷின் கொடி படத்திலும் முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்