கொரொனா பரவல்..திருமணத்திற்கு 200 பேருக்கு மட்டுமே அனுமதி-முதல்வர் உத்தரவு

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (19:02 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பனர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி  நடந்து வருகிறது. கொரொனாவைக் கட்டுப்படுத்த மே.வங்கத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமானப் பரவி வரும் நிலையயில், இதைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரொனாவைக் கட்டுப்படுத்த மே.வங்கத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதில், திருமணத்திற்கு 200 பேருக்கு மட்டுமே அனுமதி எனவும், மற்றும் சார்ந்த நிகழ்ச்சிகளில் மண்டபங்கள் , இடங்களில் 50 % பேருக்கு மேல் அனுமதி இல்லை எனவும் பொதுவெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கொரொனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்