7 மாவட்டங்களில் பரவும் கொரொனா தொற்று!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (18:33 IST)
தமிழகத்தில்  7 மாவட்டங்களில் கொரொனா தொற்று அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர்  லவ் அகர்வால்  தெரிவித்துள்ள்ளார்.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
.
விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு  மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொரொனா பரவலைத் தடுக்க நாமக்க மாவட்டத்தில் தினமும் மாலை 5 மணிக்குள் கடைகள் மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில்  7 மாவட்டங்களில் கொரொனா தொற்று அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர்  லவ் அகர்வால்  தெரிவித்துள்ள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் சென்னை, கோவை , ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, அரியலூர் போன்ற மாவட்டங்களில் கொரொனா பரவல் அதிகரித்து வருவதாக அவர்  எச்சரித்துள்ளார்.

மேலும், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற வுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்