புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா - 3ஆம் அலையா?

Webdunia
சனி, 7 ஆகஸ்ட் 2021 (12:41 IST)
புதுச்சேரியில் மேலும் 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 1,21,523 ஆக உயர்ந்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
இந்நிலையில் புதுச்சேரியில் மேலும் 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 1,21,523 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் இறந்ததால் பலியானோர் எண்ணிக்கை 1,800 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்