ஆர். எஸ். பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல் என்றும், அவர் கோர்ட்டுக்கு போகாதவர் என்றும் பாஜக பிரமுகர் கராத்தே தியாகராஜன் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலையும் உருவி எடுக்கும் வரை இங்குதான் இருப்பேன் என்று அண்ணாமலை கூறியதற்கு, "அறிவாலயத்திலிருந்து ஒரு புல்லை கூட பிடுங்க முடியாது," என்று ஆர். எஸ். பாரதி தெரிவித்தார்.
ஆர். எஸ். பாரதியின் இந்த கருத்துக்கு பதில் அளித்த கராத்தே தியாகராஜன், "ஆர். எஸ். பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். அவர் கோர்ட்டுக்கே போகாதவர். அறிவாலயத்தில் மிக்சர், பக்கோடா கொடுத்து உட்கார வைத்திருக்கிறார்கள். அவர் எப்படிப்பட்ட வீராதி வீரன், சூராதி சூரன் என்பது எனக்கு தெரியும்," என்று தெரிவித்தார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு, ஆர். எஸ். பாரதியின் மனைவி சென்னை மாநகராட்சி டாக்டராக இருந்தபோது, அவர் சரியாக பணியாற்றவில்லை. "அவரை மாற்ற வேண்டும்," என அப்போதே முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரிப்போர்ட் கொடுத்தேன். அந்த உத்தரவு வந்ததும், வேலையை ராஜினாமா செய்து விட்டு போனவர்தான் ஆர். எஸ். பாரதி மனைவி.
எனவே, ஆர். எஸ். பாரதியை பேசுவதற்கு ஸ்டாலின் அவர்கள் அனுமதிக்க கூடாது," என்று தெரிவித்தார்.