அப்பல்லோவில் கும்பாபிஷேகம் - ஜெ. சாதாரண வார்டுக்கு மாற்றமா?

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2016 (11:34 IST)
அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வருகிறார்.
 

 
தொடர் சிகிச்சை காரணமாக, முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 40 நாட்களுக்கும் மேலாக, படுக்கையில் இருந்தபடி, சிகிச்சை பெற்றுள்ளதால், கை, கால்களை அசைக்க, பிசியோதெரபி சிகிச்சை தரப்படுகிறது.
 
இதற்கிடையில், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி ஏராளமான கோவில்களில் யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர்.
 
மேலும், அப்பல்லோ மருத்துவமனை வாசலிலும் தொடர்ந்து பூஜை, யாகம் மற்றும் பிரார்த்தனைகள் அதிமுகவின் பல்வேறு பிரிவுகள் சார்பில் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் உள்ள, விநாயகர் கோவிலில், இன்று [திங்கட்கிழமை] காலை 6:00 - 7:00 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 
இதனையடுத்து, ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, பிரத்யேக அறைக்கு மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்