மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், முள்ளிப்பள்ளம் ஊராட்சியில், சங்கையா கோவில் முதல் விநாயகபுரம் காலனி வரை சாலையின் இரு புறங்களிலும் உள்ள குடியிருப்புகளை ஆக்கிரமிப்பு எனக்கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனிநபர் வழக்கு கொடுத்திருந்த நிலையில், விசாரணை முடிவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த்துறையினர் மூலம் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என, உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த பகுதியில் குடியிருக்கும் சுமார் 128 நபர்களுக்கு 15 நாட்களுக்குள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும், இல்லையென்றால், அரசே காலி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளும் என நோட்டீஸ் கொடுத்திருந்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக இன்று 20க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்:
முள்ளிப்பள்ளம் ஊராட்சியில், சங்கையா கோவில் முதல் விநாயகபுரம் காலனி வரை சாலையின் இருபுறங்களிலும் ஆக்கினிப்புகள் இருப்பதாக கூறி 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் எங்களை காலி செய்ய அரசு வலியுறுத்தி வருகிறது.
மேலும்,தனி நபருக்கு ஆதரவாக வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.
இதில், உள்ள 128 நபர்கள் 15 நாட்களுக்குள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டுமென, நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
மேலும், இது குறித்து எங்களின் கருத்தை கேட்காமல் அரசு வழக்கறிஞர் தன்னிச்சையாக முடிவு செய்து, வருவாய் துறையினரின் தவறான வழிகாட்டுதலை வைத்து சாலையின்
இரு புறம் உள்ள இடத்தை அளந்து நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
வருவாய் துறை அளந்த இடத்தின் வரைபடத்தில் அதிகமான குளறுபடி இருப்பதாகவும், இதனை நீதமன்றத்தில் முறைப்படி தெரிவிக்காமல், இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், ஆக்கிரமிப்பு என்று சொல்லும் பகுதியில் முள்ளிப்
பள்ளம் ஊராட்சி நிர்வாகமே குடிநீர் மேல்
நிலை நீர் தேக்க தொட்டி
தற்போது கட்டி வருகின்றனர்.உண்
மையிலேயே ஆக்கிரமிப்பு இருந்தால் ,
அரசே குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் நடவடிக்கை மேற்
கொள்ளுமா என்றும், நெடுஞ்
சாலை துறைக்கு தேவையான இடம்
சாலையின் இருபுறமும் உள்ள
போதும் தனி
நபருக்கு ஆதரவாகவும் தனி
நபரின் வீட்டு மனைக்கு
பாதை அமைக்கும் நோக்கத்
துடனும், நெடுஞ்
சாலை துறையினர் மற்றும் வருவாய் துறையினர் செயல்
படுகின்றனர். ஆகையால், நீதிமன்றம் பொது
மக்களின் நலனை கருத்தில் கொண்டு குடியிருப்பவர்களின்