பாஜக பிரமுகர் வீட்டு முன் வாக்குவாதம் செய்த திமுக எம் எல் ஏ – சிசிடிவியில் சிக்கிய காட்சிகள்!

புதன், 24 ஜூன் 2020 (08:25 IST)
மதுரையில் பாஜக பிரமுகரை தாக்க முயன்றதாக திமுக எம் எல் ஏ மூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி எம் எல் ஏ வாக இருப்பவர் மூர்த்தி. இவரை பற்றி பாஜக இளைஞர் அணி கோட்டப் பொறுப்பாளர் சங்கரபாண்டியன் என்பவர் சமூகவலைதளங்களில் தவறாக செய்திகள் பரப்பியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி சங்கரபாண்டியனின் வீட்டுக்கு முன் சென்று வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்த வாக்குவாதம் முற்றி மூர்த்தி சங்கரபாண்டியனையும் அவரது மனைவியையும் தாக்க முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக வீட்டின் முன் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக காவல்துறையில் சங்கரபாண்டியன் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்