பெரும் நிலப்பகுதியை சீனாவுக்கு தாரை வார்த்த மன்மோகன் சிங் – ஜே.பி. நட்டா
திங்கள், 22 ஜூன் 2020 (22:57 IST)
சமீபத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
சீன ராணுவத்தில் 35 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த அனைதுக் கட்டி கூட்டத்தை பிரதமர் மோடி நடத்தி விளக்களித்தார்.
இதுகுறித்து விமர்சனம் செய்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மோடி தவறான தகவல்கள் அளிப்பதாக கூறினார்.
இதற்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளதுடன், காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் எல்லைப் பகுதியில் 43, 000 கி.மீ, நிலப்பரப்பு சீனாவிடம் தாரைவார்க்கப்பட்டது என பரபர்ப்பாக குற்றம்சாட்டியுள்ளார்.