ரூ.750 கோடி இழப்பீடு: வேதாந்தா நிறுவனத்திற்கு செக்?

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (18:23 IST)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்ட போது வெடித்த கலவரம் காரணமாக 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். 
 
இதன் பிறகு அரசு மீது எழுந்த விமர்சனங்கல் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. 
 
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில், ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக ரூ.750 கோடி வழங்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
சிவகங்கையை சேர்ந்த விஜய் நிவாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார். 
 
அந்த மனுவில், வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 கோடியும், ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட ஆலைகளை சீர் செய்ய ரூ.620 கோடியும் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்