இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து அங்குள்ள மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார். கடந்த 2016ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாகத்திற்கு அளித்த அனுமதியை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வாபஸ் பெற்றது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி கலெக்டர், சந்தீப் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக மக்கள் பயப்படத் தேவையில்லை. இதை அப்புறப்படுத்தப்படும் பணி நாளை தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.